அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

வாருங்கள் சத்திய மார்க்கத்தில் நுழைவோம். அன்புடன் வரவேற்கிறோம். முஹம்மது ஜுபைர் சிராஜி கணியூரீ

புதன், 3 ஜூன், 2015

சுவனத்தில் ஆதம்[அலை]-ஹவ்வா[அலை] ஆடை அவிழ்ந்ததா? பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான். அல்-குர்'ஆன் 7 ;22
மேற்கண்ட இந்த வசனத்திற்கு, ''ஆதம்-ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் அந்த மரத்தினை சுவைத்தவுடன் அவர்களின் ஆடை நீங்கி, அவர்களின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டனர்.''என்ற விளக்கத்தை அறிஞர்கள் முன்வைத்துள்ளார்கள். அறிஞர்களின் இந்த வாதம் தவறு என்று கூறும் அறிஞர் பீஜே அவர்கள், 
''இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்க வில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர் களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது தான் சரியாகும். இதைச் சாப்பிட்டவுடன் சொர்க்கத்தின் இலைகளால் இருவரும் தம்மை மறைத்துக் கொண்டார்கள் என்று அடுத்தடுத்த வசனங் களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இம் மரம் பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என்பது தெரியவரும்.'' என்று தனது திருக்குர்'ஆன் தமிழாக்கம் முதல் பதிப்பில் சொன்னார். பின்னாளில் எழுந்த விமர்சனங்களை கண்டு, இப்போது இறுதியாக ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.'' என்று கூறுகிறார்.

இந்த வசனத்தை பொருத்தவரை இது பீஜே அவர்களின் மூன்றாவது பரிமாணமாகும்.

பரிமாணம்;1 இந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று திருக்குர்ஆன் 2:35, 7:19,20,22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருகுர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென் பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம்(அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். திருகுர்ஆனிலும், நபிமொழியிலும் கூறப்படாததைக் கூறுவோர் இறைவன் பெயரில் இட்டுக் கட்டிய குற்றத்தைச் சுமப்பவர்களாவர்.
பரிமாணம்;2 இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்கவில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது சரியாகும்.
பரிமாணம்;3  ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.''
முதல் பரிமாணத்தில் அது எந்த மரமாக இருந்தால் நமக்கென்ன என்கிறார். இரண்டாவது பரிமாணத்தில் அது பாலுணர்வை தூண்டிய மரம் என்கிறார். மூன்றாவது பரிமாணத்தில் அது அவர்களின் வெட்கத்தலங்களின் தனித்தன்மையை உணர்த்திய மரம் என்கிறார். இப்போதைய தனது பரிமாணங்களுக்கு பீஜே ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். அது இதுதான்; 
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.(20:118)
பார்த்தீர்களா! இந்த வசனத்தில் அல்லாஹ் சுவனத்தில் நிர்வாணமாக இருக்கமாட்டீர் என்று சொல்கிறான். பிறகு எப்படி ஆதம்-ஹவ்வா நிர்வானமகியிருப்பார்கள் என்று கூறுகிறார். அறிஞர் பீஜேயின் வேலையே முன்னால் உள்ள வசனங்களையும், பின்னால் உள்ள வசனங்களையும் விட்டுவிட்டு தனக்கு தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டுவதுதான். மேற்கண்ட வசனத்திற்கான விளக்கம் பெற எங்கும் போக வேண்டியதில்லை. பீஜே விட்டுவிட்ட  இதையொட்டிய வசனங்களை சேர்த்து பார்த்தாலே விளங்கிக் கொள்ள முடியும். 
அப்பொழுது "ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.  (20:117
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.  (20:118)
"இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிளில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).  (20:119)
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான்.  (20:120)
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.  (20:121)
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.  (20:122)
பீஜே சொல்வது போல் வெறுமனே இறைவன் நிர்வாணமாக இருக்க மாட்டீர் என்று மட்டும் சொல்லவில்லை. ஆதம் தம்பதிகளே! இந்த சுவனத்தில் நீங்கள் பசியுடனோ, தாகத்துடனோ, வெளியில் கஷ்டப்பட்டுக் கொண்டோ இருக்கவேண்டியதில்லை என்றும் சொல்லும் இறைவன் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்கள் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? ஆதம் தம்பதிகளுக்கு சுவனத்தில் செய்து கொடுத்துள்ள வசதி வாய்ப்புகளை கூறுகின்றான். அந்த வசதி வாய்ப்புகளை அனுபவித்த நிலையில், ஆதம் ஹவ்வா தம்பதிகள் மாறு செய்ததால் அங்கே நிர்வாணமாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அறிஞர் பீஜே குழம்புவதும்-குழப்புவதும் ஏன்? பீஜேயின் கூற்றுப்படி ஆதம் அலை, ஹவ்வா அலை ஆகியோருக்கு சுவனத்தில் நிர்வாணமே இருக்ககூடாது என்றால் அவர்கள் தாம்பத்தியத்திலும் கூட நிர்வாணம் இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுமே! அதற்கு என்ன பதில் சொல்வார்? அவ்விருவருக்கும் தாம்பத்தியம் தடை செய்யப்பட்டது என்று கூறுவரா?
இதுபோக, ஆதம்-ஹவ்வா ஆடை அவிழ்ந்தது என்ற அறிஞர்களின் கருத்து தவறு என்று இன்று சொல்கிறாரே! அதே பீஜே அவர்கள், அல்ஜன்னத் டிசம்பர் 94 இதழில், 'நிர்வாணமாக குளிக்கலாமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது,
''ஆதம் ஹவ்வா இருவரும் தடையை மீறி விலக்கப்பட்டதை உண்டவுடன் அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. நிர்வாணிகளாயினர்.உடனே சொர்க்கத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலானார்கள் என்ற விபரம் 7 ;22 20;121 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது. மனிதர்கள் குறிப்பாக நபிமார்கள் தம் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளும் இயல்பினராகவே உள்ளனர் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். கணவன் மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த நிலையில், வேறு எவரும் இல்லாத நிலையில் இறைவன் முன்னிலையில் வெட்கப்பட்டுக்கொண்டே ஆதமும் ஹவ்வாவும் தங்களை மறைந்துக் கொண்டனர்.'' என்று பதிலளித்துள்ளார்.
அதாவது இந்த பதிலில் ஏற்கனவே உறுப்பும் இருந்து, உணர்ச்சியும் இருந்து, உறுப்பின் தனித்தன்மைகளையும் உணர்ந்துள்ள மனிதன் ஒருவர் தான் கேட்கின்றார். நான் ஆடையின்றி குளிக்கலாமா என்று? உடனே அறிஞர் பீஜே, ஆதம்-ஹவ்வா அலை தம்பதியைப் பார்த்தீர்களா? அவர்கள் யாருமே இல்லாமல் தனித்திருந்த போதும், நிர்வாணமானவுடன் தங்களை மறைத்துக் கொண்டார்கள். இதுதான் மனித இயல்பு என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கோ அல்ஜன்னத்தில் கூறியதற்கு மாற்றமாக, மனமுரண்டாக அடுத்தடுத்த மூன்று பரிமாணங்களைக் கண்டிருக்கிறார். இன்னும் எத்தனையோ?

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையணிய ஃபத்வா!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஆய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை  வழங்கியிருந்தனர்.  இதில் வேடிக்கை  என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது  என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;
  1. ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
    நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)
  2. கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள்.கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)
  3. உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)
  4. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)
  6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)
  7. மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற  சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,
கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.

கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.

கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய 
அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள்.  கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின்  அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே?

ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால் ஆய்வாளர்  
பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது  என்பதின் அர்த்தம்  என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி  முன்னால்  நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே  என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா?

மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது  தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.

மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால்  கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை  என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா?

கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது?

அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?

சனி, 29 டிசம்பர், 2012

பி.ஜே.தொழாததற்கு த.மு.மு.க.வே காரணம்! அதிரையில் அஸ்ரப்தீன் பிர்தவ்சி விளக்கம்!

அதிராம்பட்டினத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தக்லித் ஜமாத்தின் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் ஷாஜஹான் எனும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் எழுந்து ' உங்களின் தலைவர் பி.ஜே.பல வருடங்களாக பஜர் தொழுவதில்லை என்றும் உங்களின் பொருளாளர் அன்வர் பாஷா புகைப் பிடிப்பவராகவும் இருக்கும் நிலையில்,  ததஜ வில் இருக்கிறார்களே என   கேட்க அண்ணனை அப்படியே தக்லித்  செய்யும் மிமிக்ரி நடிகர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி அசடு வழிந்து பதில் என்ற பெயரில் உளறிக் கொட்டினர்.
த.மு.மு.க.வில் இருக்கும் போது அவரது பாதுகாப்பு கருதி அவர் தொழ வர வேண்டாம் எனும் முடிவு எடுக்கப்பட்டது. அவர்  தொழாததர்க்கு அவர்கள்தான் காரணம் ! பி.ஜே.தொழவில்லை என்றால் அவர் நரகம் செல்வார்! அது குறித்து யாரும் கவலைப் பட வேண்டியதில்லை!  என்றும் அன்வர் பாஷா சிகரெட் பிடிப்பதை யாரும் பார்க்கவில்லை  சால்ஜாப்பு கூறினார்.

  • நமக்கு எழும்   கேள்விகள் யாதெனில் 
  • மார்க்க கடமையான தொழுகையை மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக விடலாமா?
  • தமுமுக வில் இருந்து வெளியில் வந்து பரிசுத்த இயக்கம் கண்ட பிறகாவது தொழுது   இருக்கலாமே  ? 
  • பாதுகாப்பு காரணம் எனில், இப்போது துப்பாக்கி ஏந்திய காவலர்கள்  வழங்கிய இந்த ஒரு வருடத்திலாவது தொழ வந்திருக்கலாமே?
  • அல் உம்மா, விடியல், போன்ற முஸ்லிம் இயக்கங்களால் உயிருக்கு ஆபத்து' எனக் கூறும் நீங்கள் மற்ற நான்கு வக்துக்களும் வரலாமே? 
  • மற்ற விசயங்களுக்காக அலுவலகத்திற்கு வரும் போதும், தேர்தல் நேரத்தில் அரசியல்வதிகளுக்காக தெருத் தெருவாக பிரசாரம் செய்யும் போதும் இல்லாத பாதுகாப்பு பயம் அல்லாஹ்வை தொழ பள்ளிக்கு வரும் போது மட்டும் வருவதேன்?
  • அவர் தொழா விட்டால் அவர் நரகத்திற்கு செல்வார் ! மற்றவர்கள் கேட்க தேவையில்லை என்றால் வட்டி வாங்குபவன் ,வரதட்சனை வாங்குபவன், மவ்ளுது ஓதுபவன், பாதிஹா ஓதுபவன் யாரையும் நீங்கள் திட்ட  வேண்டியதில்லையே?
  •     நீங்கள்   உங்களை  மறந்து விட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகின்றீர்களா? எனும் குரான் வசனத்தின் படி முதலில் பி.ஜே.வுக்கு தொழுகையை ஏவி அன்வர் பாஷா சிகரெட்டை விட்டும் தடுக்க த.தஜ.நிர்வாகிகள் முன் வர வேண்டாமா?
  • தொழுகையை நிலை நாட்டி ஜகாத் கொடுப்பவர் தான் பள்ளிவாசலை நிர்வகிக்க வேண்டும்! என அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான் அதனால் தொளுகையில்லாத சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகள் தகுதியற்றவர்கள் எனக் கூறிய ததஜ, இப்போது தொழுகையை நிலை நாட்டாத ஒருவரை 600 பள்ளிவாசல்களின் [ தமிழகம முழுதும் ததஜ விற்கு அறுநூறு பள்ளியாம்!  இதுவே பொய்] நிர்வாகியாக, பரிசுத்த இயக்கத்தின் தலைவராக வைத்திருப்பது சரியா?
  • பள்ளிவாசல்களுக்கு தலைவராக இல்லை ! என்றாலும் ' அசர் போகும் , மக்ரிப் போகும் மிலாத் ஊர்வலமும் போகும் ஒருத்தனும் தொழ மாட்டன்! இவர்கள் எல்லாம் இஸ்லாமிய இயக்கத் தலைவர்களாம்! என மீலாத் கமிட்டி தலைவர்களை விமர்சித்த பி.ஜே, தொழுகையை நிலை நாட்டுவதில்லையே?  இவர் ஒரு இஸ்லாமிய இயக்கத் தலைவரா? 
  • பொருளாளர் அன்வர் பாஷா சிகரட் பிடிப்பது ஊர் அறிந்த விஷயம்! பி.ஜே.முன்னாலேயே   புகை பிடிக்கக் கூடியவர் ! இல்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா?
  • பி.ஜே. தொழுகையை நிலை நாட்டுவதில்லை என்று அபு அப்துல்லாஹ் தொடங்கி அவரோடு நெருக்கமாக இருந்த அன்றைய, இன்றைய மாநில நிர்வாகிகள் வரைக்கும் அனைவருக்கும் தெரியும்!  இல்லை  என இன்றைய மாநில நிர்வாகிகள் அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா? 
இந்த விசயத்தில் இன்றைய மாநில நிர்வாகிகள் கூட பி.ஜே.விற்கு 
வக்காளத் வாங்க மாட்டார்கள் ஏன் எனில் அவர்களுக்கே தெரியும்! 'அது அவருக்கும் அல்லாஹ்விற்கும் உள்ளது" என்று   தான் கூற முடியுமே தவிர வேறு ஒன்றும் சொல்ல முடிவதில்லை!  எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் உள்ளது என இறுமாப்போடு பேசிய அண்ணனிடம் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது!
    - இப்னு  ஹுசைன்!  

பன்றி நேசனின் முன்னுக்குப்பின் முரணான பத்வா!

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு,


நபி(ஸல்) அவர்கள் வியாபரம் தடை செய்த ஒன்றை அதை கூடும் என பத்வா கொடுக்கிறார்கள்,
 ஹதிஸை பற்றி எந்த ஞானமும்  இல்லாமல் எல்லாம் தெரிந்தது போல் மார்க்கத்தில்
இல்லாதத்தை புகுத்தியுள்ளார்கள்.இவர்களின் முனாபிக் தனத்தை இன்னும் நீங்கள்
அறியாமல் மூடர்களாக உள்ளீர்கள்,


நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
 மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை
செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே!
செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம்
மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப்
 பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது!
அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை
சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை
உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள் (இமாம் புஹாரி(ரஹ்)

இதில் தெள்ள தெளிவாக பன்றியை வியாபரம் செய்யக் கூடாது என தெளிவாக
அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் முனாபிக் பிஜே, பன்றியின் தோல் வியாபரம் செய்யலாம்
எனப் பத்வா வழங்கியுள்ளார., அதுவும்  சரி என நம்பும் அவர்களின் கண்மூடித்தனமான கூட்டம்,

பன்றியே வியாபரம் செய்ய தடுக்கப்பட்டிருக்கும் போது பன்றியுள்ள தோல் மட்டும் எவ்வாறு
வியாபரம் செய்ய முடியும்.பன்றி உள்ள எதையும் விற்பனை செய்யக் கூடாது எனத் தெளிவாக
கூறப்பட்ட பின்னர் ஆனால் முனாபிக் பீஜே அதை வியாபரம் செய்யலாம் என்பது எந்த
வகையில் நியாயம்,அறிவுடையோருக்கு விடை கிடைக்கும்

ஆனால்  பீஜே  அன்று:

பீஜேவே, பன்றியும்,பன்றியில் உள்ள எல்லா பாகமும் ஹராம் எனக் கூறும் வீடியோவை கீழ் 
உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும், பார்க்கவும் வீடியோ நேரம் 5:10 வினாடிகளிலிருந்து....





ஆனால் அவரின் பத்வாவுக்கு எதிராக அவரே தற்போது பன்றியின் தோல் ஹலால் எனக் கூறும்
பத்வாவை அவரது இணையத் தளத்தில் காணுங்கள்:     
http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/panri_thol_viyabaram/

பன்றியின் இரத்தம் ஹலால் எனும் பத்வா பார்க்க:

http://www.youtube.com/watch?v=mOkEC5vlNQs

தற்போது அறிவீர்கள் பீஜே ஒரு மாபெரும் பொய்யன் என்று


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மது (1797)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால்
தூய்மை அடைந்துவிடும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (596)

நமது பதில்:

இதறகு முன் உள்ள ஹதிஸை மறுத்து வெளியிட்டுள்ளார்கள்,,நபி(ஸல்) அவர்கள் செத்த
ஆடுக்கு விதிவிலக்கு கொடுத்தார்கள், கிழே உள்ள ஹதிஸை தெளிவாக படித்திற்கள் என்றால்
உங்களுக்கு நன்றாக புரியும், எப்படி மார்க்கத்தில் விளையாடுகின்றார்கள் என்பதை
கண்டறியுங்கள்.

(என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று
(செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து
சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனைடயக் கூடாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை
அடைந்துவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்,
இமாம் புஹாரி(ரஹ்))

 மேல் உள்ள இந்த ஹதிஸை மறைத்து அதற்கு பின் உள்ள  ஹதிஸின் பகுதியை மட்டும்
மறைத்து கூறியுள்ளார்கள். இது இவர்களுக்கு புதியதல்ல


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

நமது பதில்:

இதில் எல்லா என்ற வார்த்தை வந்துள்ளதால் அது பன்றியும் பொருந்தும் எனக் கூறுகின்றார்கள்,
 அதனால் அது வியாபரம் செய்யலாம் எனக் கூறும் சொல், இது இவர்களின் அறியாமை வாதம்
ஆகும்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்ன உங்களுக்கு நன்றாக புரியும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள்
 என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்)).

இதில் வெளிப்படையாக பார்க்கும் போது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் திக்ரு
செய்வார்கள் எனப் பொருள் கிடைக்கும் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு அது
தூய்மையான நிலையில் தவிர வேறெந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை
நான் வெறுக்கிறேன் என மற்றொரு வழியில் நிருபிக்கப்பட்டுள்ளது

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி)
அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு
செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான்
வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்
இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம் 
முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),
இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:

ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின்
பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.

இதிலிருந்து,

எல்லா நிலை என்பது நபி(ஸல்)  அவர்கள் எல்லா நிலையில் திக்ரு செய்வார்கள் ஆனால் அவர்கள் தூய்மையான நிலையில் இருப்பார்கள்,

அதே போல் இதில் எல்லா தோல் எனக் கூறப்பட்டாலும் அது பன்றியை தோல் தவிர, ஏனென்றால்
ஹரமான  பன்றியை விற்பனைச் செய்யகூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள போது
பன்றித் தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும். பன்றித் தோல், பன்றியில் இல்லை
 எனக் கூறமுடியமா? அது எவ்வாறு வியாபரத்திற்கு பொருந்தும்.

எனவே பன்றியும், பன்றித்தோலும், பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது

நன்றி -முஹம்மத் அப்பாஸ்

அடுத்த விவாத விளையாட்டிற்கு தயாராகி விட்டார் அண்ணன். பராக்...பராக்!!


இறைத்தூதர் ஸல்... அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இன்றைய அல்லாஹ்வை நம்பிய சுன்னத் ஜமாஅத்காரர்களை விட மோசமான யூத-கிறிஸ்தவ-முஸ்ரிக்குக்களை சந்தித்தார்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஈசா நபி அலை... அவர்கள் தொடர்பாக நஜ்ரான் பகுதி கிறிஸ்தவர்களிடம் ஒரு முபாஹலாவுக்கு தயாரானது நீங்கலாக, வேறு யாருடனும் விவாதம் என்றோ  முபாஹலா என்றோ காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை. அழகிய உபதேசங்கள் வாயிலாகவே அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்த்தார்கள். ஆனால் அண்ணனும் அவரது தம்பிகளும் வாயைத் திறந்தாலே விவாதத்திற்கு வர்றியா என்று ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணனின் ஆரம்ப காலகட்டத்தில் நடந்த கோட்டார் விவாதம், ஜெபமணி விவாதம் உள்ளிட்ட சில விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெற்றது. அவரின் அடுத்தடுத்த விவாதங்களில் தனது கருத்தை நிலைநாட்டிட வார்த்தைகளை பிடித்து தொங்குவதும், தான் தப்பிப்பதற்காக ஹதீஸை பொய்யாக்குவதும், மத்ஹபை மறுக்கிறேன் என்ற பெயரில் மத்ஹபை ஆதரிக்கும் அறிஞர்கள் கூட அறியாத, மக்களின் பயன்பாட்டில் இல்லாத மத்ஹப் கிதாபுகளில் உள்ள ஆபாசங்களை பற்றியே பேசி நேரத்தைக் கழிப்பதும், ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக பால்குடி சம்மந்தப்பட்ட ஹதீஸை விளக்குகிறேன் என்ற பெயரில் படு ஆபாசமாக வர்ணித்து அந்த ஹதீசோடு சம்மந்தப்பட்ட சஹாபாக்களை இழிவுபடுத்துவதும் என அண்ணன் அடிக்கும் கூத்துக்களும், விவாதம் முடிந்ததோ இல்லையோ வெற்றி.. வெற்றி.. இமாலய வெற்றி என்று அவரது தம்பிகள் அடித்துக்கொள்ளும் பெருமைகளும் அண்ணனின் விவாதம் என்றாலே மக்களுக்கு வெறுப்பைத் தந்தது.

அண்ணனின் விவாதம் என்றாலே பெண்கள் எல்லாம் சேனலை மாற்றி விட்டு அண்ணன் விவாதத்தை விட சீரியல் எவ்வளவோ பரவாயில்லை என மாற்றி விடுவதால், டிவியில் ஒளிபரப்பும் போது வாய்ஸ் கட் பண்ணிவிட்டு ஊமைப்படம் காட்டினார்கள். அந்த அளவுக்கு அண்ணனின் விவாதங்கள் அடல்ஸ் ஒன்லியாக இருப்பதால் தம்பிகளும் ரசித்து ருசித்து அண்ணனின் விவாதத்திற்கு டிக்கெட்டிற்கு அலைமோதுகிறார்கள். மத்ஹப் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும், நாத்திகர்கள் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் நம்பி டிக்கெட் எடுக்கலாம். கண்டிப்பாக தம்பிகளின் தேவை அண்ணனால் நிறைவேற்றப்படும்.

எங்கோ யாரென்றே தெரியாமல் இருந்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாளியுடன் விவாத விளையாட்டு விளையாடியே அவரை பிரபல்யமாக்கியதன் மூலம் மங்கிக் கிடந்த தர்காவை மீண்டும் ஒளிபெற செய்தார் அண்ணன். சுப்ஹான  மவ்லிது குப்பையில் வீசவேண்டிய ஒன்று என்று மேடையில் முழங்கிவிட்டு, களியக்காவிளை விவாதத்தில் சுப்ஹான மவ்ளிதைப் பற்றி வாய் திறக்காமல் நாகூர் குளத்தில் மூழ்கியே போனார். அண்ணனின் இந்த செயலால் பார்த்தீகளா? பீஜெயால் சுப்ஹான மவ்லிதை ஷிர்க் என நிரூபிக்க முடியாமல் சாஹுல்ஹமீது மவ்ளிதுக்கு தாவிட்டார்  என்று கூறியே ஜமாலி முன்பை விட அதிகமாக மவ்லிதை தூக்கிப் பிடித்தார்.

இறைவனுக்கு உருவம் உண்டு என நிரூபிக்கப் போனவரிடம், இறைவன் ஆனா? பெண்ணா? அலியா? ஒற்றைக்கால் உள்ளவனா?என்றெல்லாம் ஜமாலி கேட்ட கேள்விகளை கண்டு திணறி விவாதம் முடிந்த கையோடு வீட்டிற்குள் புகுந்து கதவை சாத்தியவர், நான் ஆய்வு செய்யப்போகிறேன்; ஆறு மாசத்திற்கு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். பிறகு அவசரமாக வந்து கிறிஸ்தவர்களோடு விளையாடி பைபிள் ஆபாசங்கள்  என்று பக்கம் பக்கமாக பேசி, ஒரு ஹதீஸை பொய்யாக்கி விட்டு சென்றார் இதுதான் அண்ணன் விவாதத்தினால் கண்ட பலன்.

இப்போது சில மாதங்கள் கடந்த நிலையில், அண்ணனை சைபுதீன் ரசாதியிடம் மாட்டி விட்டு விட்டார்கள் அவரது தம்பிகள். விவாத ஒப்பந்தம் போட சில்லறைகளை அனுப்பக் கூடாது நீர் தான் வரவேண்டும் என்று சைபுதீன் ரசாதி கிடுக்கிப் பிடி போட வேறு வழியின்றி கிறுகிறுத்துப் போய் ஒப்புக்கொண்டிருக்கிறார் அண்ணன். இம்மாத இறுதியில் மரைக்காயர்பட்டினத்தில் மரைக்காயர் அண்ணன் விவாத ஒப்பந்தம் செய்ய பரிவாரங்களோடு செல்கிறார். மற்ற விவாதத்தை விட இந்த விவாதம் அண்ணனுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது. ஏனென்றால் இதில் மார்க்கம் பேசுவதற்கு தகுதியானவர் யார் பீஜேயா? சைபுதீன் ரசாதியா? என்பதுதான் பிரதான தலைப்பு. இதில் தோற்பவர்கள் மக்கள் மத்தியில்பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் மார்க்கம் பேசக்கூடாது மார்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது என்பதுதான் ரசாதியின் நிபந்தனையாகும். இருவரில் கரைசேரப் போவது யாரோ? ஆனாலும் அண்ணனின் வார்த்தை ஜாலம் அவரை காப்பாற்றி விடும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறர்கள் அவரது தம்பிகள்.

நம்மைப் பொறுத்தவரையில் இரண்டுபேரும் ஒன்றுதான். சைபுதீன் ரசாதி மத்ஹப்  வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அண்ணனோ தனது அறிவு மீது கொண்ட வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அல்லாஹ்தான் இந்த இரு குழப்பவாதிகளிடம் இருந்து மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற வேண்டும்.

அண்ணனுக்கும் -ரசாதிக்கும் நடந்த கடித பரிமாற்றத்தில் இருவரும் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவர்களது தரத்தை நிரூபிக்கும் சான்றுகள். மற்றும் இன்னும் பல தகவல்கள் விரைவில்...

--
அப்துல்முஹைமின்.