ங்கள்!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே? – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.
பதில்: தொழலாம்.
ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது
என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு
அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று
திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது.இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]
மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி
உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில் காயிப்
ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு
ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன?
என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல்
காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக்
செய்க; http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/
அந்த ஆய்வு இதுதான்
காயிப்ஜனாஸா எப்போது?
காயிப்ஜனாஸா எப்போது தொழவேண்டும்?
இந்தியாவில் மரணமாகி ஜனாஸா தொழுகை தொழவைக்கப்படாத ஒருவருக்கு சவூதியில் காயிப் ஜனாசா தொழுகை தொழலாமா?
அப்துல்லாஹ்
பதில் :
பதில் :
ஜனாஸாத்
தொழுகை என்பது இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் கூட்டாக சேர்ந்து ஆற்றும்
கடமையாகும். இறந்தவருக்கு ஒரு முறை ஜனாஸாத் தொழுவதைத் தான் நபி (ஸல்)
அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். ஒரே நபருக்கு இரண்டு மூன்று
என்று பல முறைகள் ஜனாஸாத் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு
காட்டித்தரவில்லை.
எனவே
இறந்துவிட்ட ஒருவருக்காக முஸ்லிம்கள் கூட்டாக சேர்ந்து தொழுகை
நடத்திவிட்டால் அத்துடன் அவருக்காக ஜனாஸா தொழுவது முற்றுபெற்று விடுகிறது.
மற்றவர்களுக்கு அத்தொழுகையில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சரியே. வாய்ப்பு
கிடைக்காதவர்கள் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
காயிப்
ஜனாஸாவைப் பொறுத்தவரை அதை நபி (ஸல்) அவர்கள் அபிசீனியா நாட்டு மன்னர்
நஜ்ஜாஷி இறந்த போது மட்டும் அவருக்காக தொழுதுள்ளார்கள். மன்னர் நஜ்ஜாஷி
உயிருடன் இருந்த காலத்தில் நபி (ஸல்) அவர்களை நம்பிக்கைக்கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர். அவருடைய நாட்டு குடிமக்கள் கிறிஸ்தவர்கள்.
மன்னர் நஜ்ஜாஷி இறந்தபோது அவருக்காக அபிசீனியா நாட்டில் ஜனாஸா தொழுகை தொழ வைக்கப்படவில்லை.
எனவே தான் அவருடைய உடல் தனக்கு கிடைக்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள்
மதீனாவில் இருந்து கொண்டு அவருக்காக தொழுகை நடத்தினார்கள்.
1320 حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَنَّ ابْنَ
جُرَيْجٍ أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّهُ سَمِعَ جَابِرَ
بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ تُوُفِّيَ الْيَوْمَ رَجُلٌ
صَالِحٌ مِنْ الْحَبَشِ فَهَلُمَّ فَصَلُّوا عَلَيْهِ قَالَ فَصَفَفْنَا
فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ وَنَحْنُ
مَعَهُ صُفُوفٌ قَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ كُنْتُ فِي الصَّفِّ
الثَّانِي رواه البخاري
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், "இன்றைய தினம் அபிசீனியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனவே வாருங்கள்! அவருக்காக பிரேதத்தொழுகை (ஜனாஸாத்) தொழுங்கள்'' என
கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத்)
தொழுவித்தார்கள். அப்போது நான் இரண்டாவது வரிசையில் நின்றிருந்தேன்.
புகாரி (1320)
எனவே இறந்துபோனவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழ வைக்கப்படவில்லை
என்றால் இறந்தவரின் உடல் நமக்கு கிடைக்காவிட்டாலும் உலகில் எங்கிருந்தும்
காயிப் ஜனாஸா தொழவைக்கலாம். ஏற்கனவே ஜனாஸாத் தொழுகை
தொழவைக்கப்பட்டிருந்தால் மீண்டும் அவருக்காக ஜனாஸாத் தொழுவது கூடாது. மாறாக
அவருக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை
செய்துகொள்ளலாம்.
இறந்துபோனவர்
நிரந்தர நரகத்திற்குரிய காரியங்களை செய்யாத இறைநம்பிக்கையாளராக
இருக்கவேண்டும் என்ற பொதுவான விதியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா
தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில், தொழுகை
நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார்.
இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில்
இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு
திரும்பியுள்ளதை படியுங்கள்;
உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட,
நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள் அனைத்தும்
நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை
புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு
பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
மேற்கண்ட செய்தியை கவனமாக படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட
ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை
நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை என்று கூறி
தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி] நடந்துள்ளது.
மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில்
பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள்
விளங்கிக் கொள்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக