ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிறீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும் நேர்முரனாகத் தான் இருக்கும்.
சுனாமி நிதியில் தனது இயக்கத்தவருக்கு சீருடை, உணர்வுக்கு ஒரு தொகை,
இவ்வாறாக சுனாமித் தொகையில் ஒரு பங்கு பினாமியாக போனதாக பரவலாக
குற்றச்சாட்டு அந்த நேரத்தில் எழுந்ததை மறந்திருக்க முடியாது.
அதற்கான ஆதாரம் இங்கே; https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvmm8R0_fbHpuIA4b0QF2eEsbfbSjZq09_TRRUPqVHSTWT56o9HL8y7Lz2plAvpxoDkvDwI5ffXFONuqBNL326EQiCY9ZOTCDrc0Qjax3gXBd_7CnhBQZ5JkRhNoukmEmIDDoPNa5wzO05/s1600/sunami_unarvu_23-03-2006.JPG
அடுத்து ஃபித்ரா வசூலில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மீதமாகி விட்டது. எனவே தலைமையால் நடத்தப்படும் தாஃவா சென்டருக்கு ஒதுக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும். ஃபித்ரா தொகையை தாஃவா சென்டருக்கு எப்படி ஒதுக்கலாம் என கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்தவுடன், கடந்த ஆண்டு உஷாராக வேறு வழியை கையாண்டு மீதமானஃபித்ரா தொகையை ஜகாத் நிதியில்
சேர்த்தது அண்ணன் ஜமாஅத்.
அப்போது நாம், ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரத்தை வைக்க வேண்டும். என்று கேட்டிருந்தோம். அதற்கு அண்ணன், ''நாங்க இப்பிடித்தான் செய்வோம்; விரும்புனா எங்கள்ட்ட குடுங்க; இல்லனா எங்கள ஆளை விடுங்க'ன்னு சொன்னதை தவிர வேறு பதில் சொல்ல முடியவில்லை.
அப்போது நாம், ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரத்தை வைக்க வேண்டும். என்று கேட்டிருந்தோம். அதற்கு அண்ணன், ''நாங்க இப்பிடித்தான் செய்வோம்; விரும்புனா எங்கள்ட்ட குடுங்க; இல்லனா எங்கள ஆளை விடுங்க'ன்னு சொன்னதை தவிர வேறு பதில் சொல்ல முடியவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஃபித்ரா கணக்கு வெளியிட்டுள்ள அண்ணன் ஜமாஅத், 82 ,067 ரூபாய்கள்
மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டதாகவும்
அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய பித்ரா
தொகையை உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு
விளையாடியுள்ளது. சொல்ல முடியாது; இப்போதும்
நாணயமதிப்பு பட்ட்யலிட்டு விஷயத்தை திசைதிருப்ப
அண்ணன் கால்குலேட்டர் சகிதம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா விநியோகம் தொடர்பாக இந்த ஆண்டு
82 ,067 ரூபாய்கள் மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில்
சேர்த்து விட்டதாகவும் அறிவித்துள்ளதையும், அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய
பித்ரா தொகையை உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு
விளையாடியுள்ளது என்பதையும் நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
இதற்கிடையில் மேற்கண்ட தொகை குறித்து இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது.
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான 82 ,067 பற்றி எழுதி விட்டு, 'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து 82 ,067 ஐ
மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம்
திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான
தொகை 82 ,067 எங்கே?
புரியிற மாதிரி சொல்வதாக இருந்தால் செல்வந்தர்
ஒருவர், தனது கணக்காளரிடம் பத்து ரூபாயை தந்து இதை ஏழைகளுக்கு செலவு
செய்து விட்டு கணக்கு கொடு என்கிறார்.
அதை வாங்கிய கணக்காளர் ஒன்பது ரூபாயை தனது உதவியாளரிடம் கொடுத்து
ஏழைகளுக்கு பொருள் வாங்கி கொடு என்று சொல்லி விட்டு, ஒரு ரூபாயை தன் கைவசம்
வைத்துக் கொள்கிறார்.
ஒன்பது ரூபாய் வாங்கிப்போன அந்த உதவியாளர், எட்டு ரூபாய்க்கான பொருளை
ஏழைகளுக்கு வழங்கி விட்டு, ஒரு ரூபாயை கணக்காளரிடம் மீதம் அனுப்புகிறார்.
இப்போது செல்வந்தர் கணக்காளரிடம் கணக்கு கேட்க, ஒரு ரூபாயை திருப்பித்
தந்து விட்டு, அய்யா! ஒன்பது ரூபாய் என் உதவியாளரிடம் கொடுத்தேன். அவர்
எட்டு ரூபாய்க்கு ஏழைகளுக்கு பொருள் வழங்கிவிட்டு, ஒரு
ரூபாயை என்னிடம் தந்தார். அந்த ஒரு ரூபாய் தான் இது என்கிறார்.
அப்போது செல்வந்தர், சரி! நான் கொடுத்த பத்து ரூபாயையும் அவனிடம் நீ முழுசா தந்திருந்தா நீ சொல்ற கணக்கு
சரி. ஆனா ஒரு ரூபாயை நீ புடிச்சு வச்சுக்கிட்டு அவனிடம் ஒன்பது
ரூபாய் தான குடுத்தாய். அவன் குடுத்த ஒரு ரூபாய் இங்க இருக்கு;
உன்னிடம் மீதமிருந்த அந்த ஒரு ரூபாய் எங்கே எனக் கேட்க, அதுதான்யா இந்த ஒரு
ரூபாய் என கணக்காளர் சொன்னாராம். அது போலத் தான்
அண்ணன் ஜமாத்தின் கணக்கும் உள்ளது.
எனவே மறுபடியும் கேட்கிறோம். மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை 82 ,067 எங்கே?
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
அண்ணன் ஜமாத்தின் ஃபித்ரா நிதி தொடர்பாக இன்றைக்கு
இன்னொரு விஷயத்தை பார்ப்போம். கடந்த ஆண்டு ரமலான் காலகட்டத்தில் அண்ணன் ஜமாஅத் ஒரு அறிவிப்பை செய்திருந்தது. அதாவது, ''ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் கிளைகள் சார்பாக வழங்கப்படும் ஃபித்ரா பொருட்கள் ரூ150 முதல் ரூ.250௦ வரை தான் இருக்க வேண்டும்.
ரூ.250௦க்கு மேல் ஃபித்ரா பொருள்கள் வழங்கும் கிளைகளுக்கு மாநிலத்தலைமை மூலம் ஃபித்ரா தொகை அனுப்பி வைக்கப்படாது''''.என்று அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கான ஃபித்ரா பொருட்களின் உச்சவரம்பாக ரூ.250 ஐ
நிர்ணயம் செய்த அண்ணன் ஜமாஅத், இந்த ஆண்டு அந்த உச்சவரம்பை உயர்த்தி எந்த
அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியானால் பழைய உச்சவரம்பே நீடிக்கிறது
என்று தெரிகிறது.
அண்ணன் ஜமாஅத்தின் உச்சவரம்பை மீறி, இந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு ரூ.300௦௦ முதல் ரூ.750௦ வரை மதிப்புள்ள பொருட்களை 33 கிளைகள் வழங்கியுள்ளன.
ரூ. 251 முதல் ரூ. 300௦௦ வரையிலான பொருட்கள் வழங்கிய கிளைகளை
கணக்கிட்டால் பட்டியல் நீளும். தலைமையின் கட்டளையை மீறி ஏகப்பட்ட ரூபாய்
மதிப்புள்ள பொருட்களை ஒரே குடும்பத்தாருக்கு வழங்கிய இந்த கிளைகளுக்கு,
அண்ணன் ஜமாஅத் மாநிலதலைமை ஃபித்ரா தொகையை அனுப்பாமல் இருக்க
வேண்டுமல்லவா? ஆனால் எதிலும் சொல் ஒன்று; செயல் ஒன்றாக செயல்படும் அண்ணன்
ஜமாஅத், இந்த விஷயத்திலும் சம்மந்தப்பட்ட கிளைகளுக்கு தலைமை மூலம் பணத்தை
அனுப்பியுள்ளது.
அண்ணன் ஜமாஅத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது, அண்ணன் ஜமாஅத்தின்
அறிவிப்புகளை 'ஓடுற தண்ணீல தான் ஒலக்கை கொண்டு தான் எழுதணும் போல தெரியுது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக